2007ம் ஆண்டே இவர் தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகிவிட்டார். ஆனால், இவர் தமிழில் அறிமுகம் ஆனது 2011ம் ஆண்டு வெளியான மாப்பிளை திரைப்படம் மூலமாக தான்.
முதல் படத்திலயே இவர் பார்ப்பதற்கு குஷ்பு போலவே தோற்றம் கொண்டிருந்தமையால் தமிழ் ரசிகர்களிடம் மிக எளிதாக பெரும் இடத்தை பிடித்தார் குஷ்பு போலவே, ஹன்ஷிகாவிற்கும் தமிழகத்தில் கோவில் கட்டப்பட்டிருப்பது இவர்களுக்கு மத்தியில் இருக்கும் மற்றுமொரு கோ-இன்சிடென்ட். இனி! குட்டி குஷ்பு ஹன்ஷிகா பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள் குறித்து காணலாம்…
ஹன்ஷிகா மோத்வாணி நிறைய மனிதநேய சேவைகளில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டிருக்கிறார். இவர் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கும் நிறைய உதவி செய்து வருகிறார்.
சென்னை டர்ன்ஸ் பிங்க் (Chennai Turns Pink) என்ற புறநகர் பகுதியில் வசிக்கும் பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பின் பிராண்ட் அம்பாஸிடராக இருந்து வருகிறார்.
சென்னை டர்ன்ஸ் பிங்க் (Chennai Turns Pink) என்ற புறநகர் பகுதியில் வசிக்கும் பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பின் பிராண்ட் அம்பாஸிடராக இருந்து வருகிறார்.
ஹன்ஷிகா மோத்வாணி தெலுங்கில் தான் அறிமுகமான தேசமுத்ரு என்ற படத்தில் புத்தரை பின்தொடரும் சந்நியாசி போல நடித்திருப்பார். நிஜ வாழ்விலுமே கூட ஹன்ஷிகா புத்தரை பின்தொடரும் ஒரு நபர் தான். இவருக்கு அடிதடி என்றாலே பிடிக்காதாம். அமைதியை விரும்பும் நபராக திகழ்கிறார் ஹன்ஷிகா.
ஹன்ஷிகா தனது திரை பயணத்தை சின்னத்திரையில் ஷகலக்கா பூம், பூம் என்ற இந்தி தொடரில் துவங்கினார். இதை தொடர்ந்து இவர் Des Niklla Hoga Chand என்ற தொடரிலும் நடித்திருந்தார். மேலும், இவர் அனைவருக்கும் பிடித்த குழந்தை நட்சத்திரம் என்ற ஸ்டார் பரிவார் விருதையும் வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹன்ஷிகா ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா நடித்த Koi Mil Gaya என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பெரும் வெற்றிபெற்றது. மேலும், சமூக பிரச்சனையை எடுத்துரைக்கும் படம் என்ற ரீதியில் தேசிய விருதும் வாங்கியது. இப்படத்தின் தொடர்ச்சியாக தான் க்ரிஷ் மற்றும் க்ரிஷ் 3 போன்ற பாகங்கள் சீக்வலாக எடுக்கப்பட்டன.
உருவத்தில் மட்டுமின்றி ரசிகர் மத்தியில் கிடைச்ச ரீச்சும் இவருக்கு குஷ்புவை போலவே அமைந்தது. இந்தியாவிலேயே ஒரு நடிகைக்கு கோவில் கட்டப்பட்டது குஷ்புவிற்கு தான் என்ற பெருமை இருக்கிறது. அதே போல, ஹன்ஷிகா மோத்வாணிக்கும் தமிழகத்தில் 2012- 2013 ஆண்டு கோவில் கட்டப்பட்டது.
2014ம் ஆண்டு, அவ்வருடத்தின் சிறந்த நூறு பெண்மணிகள் என்ற பட்டியலுக்கு 250 பெண்களின் பெயர்கள் நாமினேட் ஆனது. அதில் ஹன்ஷிகாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது என்பது குறுப்பிடத்தக்கது. டாப் 250ல் நாமினேட் ஆன ஹன்ஷிகாவின் பெயர், டாப் 100 பட்டியலுக்கு தேர்வாகவில்லை.
ஹன்ஷிகாவின் கண்கள் நீலநிறம். இதை வைத்து சிலர் இவரை ப்ளூ ஐ ஏஞ்சல் என்றும் அழைப்பதுண்டு. இவர் இங்கிலீஷ், இந்தி, துளு மற்றும் தெலுங்கு – தமிழ் (கொஞ்சம், கொஞ்சம்) பேசுவார். யார் காதல் வளையலும் விழாமல் இருந்த ஹன்ஷிகா சிம்புவுடன் காதல் உறவில் இணைந்து ஷார்ட் டைமில் ப்ரேக்-அப்பும் செய்துக் கொண்டார்.