ராஜபக்ஷவினரை மீண்டும் ஆட்சிக்கு வர இடமளிக்க போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
கேகாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் நவீன் திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போதைய அரசாங்கம் கடந்த சில வருடங்களில் மக்கள் உணரும் வகையிலான அபிவிருத்திகளை செய்துள்ளது.
எனினும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஐக்கிய தேசியக் கட்சியினர் அச்சம் கொள்ள தேவையில்லை.
எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் கீழ் அனைத்து துறைகளிலும் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே இளைஞர்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்