Loading...
உலகமெங்கும் மார்பக புற்றுநோய் தாக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அமெரிக்காவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை மேலாடையின்றி பாட்டு பாடிய வீடியோ வைரலாகி வருகின்றது.
ஐ டச் மைசெல்ஃப் என்ற தொடங்கும் இந்த பாடலின் வீடியோவை செரினா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான ஒருசில மணி நேரத்தில் 1.3 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
மார்பக புற்றுநோய் குறித்து பெண்களை விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு பாடல் பாடியதாகவும், வரும்முன் காப்பதே நல்லது என்றும் செரினா கூறியுள்ளார்.
Loading...