சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து சிவசேனா கட்சி முழுயடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்த போராட்டம் இரத்துச் செய்யப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற உச்ச நீதிமன்ற அறிவிப்புக்கு ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து இன்று 01 ஆம் திகதி கேரள மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக சிவசேனா அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கேரளாவில் 7 மாவட்டங்களில் இன்று புயல் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
தங்களது முழு கடையடைப்பு போராட்டத்தை இரத்து செய்வதாக சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மாநில நிர்வாகிகள் கூறுகையில், முழுகடையடைப்பு போராட்டத்தை இரத்து செய்தாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.