தென்னாப்பிரிக்காவில் வேலை பார்த்து பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் ஹேர்ஸ்டைலிஸ்ட் பிரென்டன் ஆலிஸ்டர் டீ ஜீ, தற்போது 10 ஆண்டுகளாக இந்தியாவில் தங்கி பிரபலங்களின் ஹேர்ஸ்டைலிஸ்டாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் டேட்டிங் ஆப் ஒன்றில் 16 வயது சிறுவன் ஒருவன் தனக்கு 18 வயது என்று பொய் சொல்லி கணக்கு ஆரம்பித்து அதன் மூலம் சிறுவனுக்கு பிரென்டனின் அறிமுகம் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, பிரென்டன் சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கங்கனா ரனாவத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு பிரென்டனை கைது செய்துள்ளனர். இதைக்கண்ட படக்குழு அதிர்ச்சி அடைந்தது.
கடந்த 2017ம் ஆண்டு டேட்டிங் ஆப்பை டவுன்லோடு செய்துள்ள சிறுவன், தனக்கு 18 வயது என்று பொய் சொல்லி தன்னுடன் உறவு கொள்ளுமாறு 30 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களை கேட்டுக் கொண்டுள்ளான். கடந்த மே மாதம் இந்த ஆப் குறித்தும், பலாத்கார சம்பவம் குறித்தும் சிறுவனின் தாய்க்கு தெரிய வந்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பிரென்டனை வரும் அக்டோபர் மாதம் 3ம் திகதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.