காற்று வெளியிடை படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் அதிதி ராவ். அதையடுத்து அவர் நடிப்பில் வெளியானது செக்கச் சிவந்த வானம். மேலும் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் உதயநிதி ஸ்டாலினின் ஜோடியாக நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் தனுஷ் தற்போது இயக்கி வரும் படத்தில் நாகர்ஜுனா, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ் ஹைதரி, அனு இமானுவேல் உள்ளிட்ட பலர்ரும் நடித்து வருகிறார்கள். அதிகாரப் பூர்வமாக பெயரிடப்படாத இந்த படத்திற்கு, நான் ருத்ரன் என்ற தலைப்பை தனுஷ் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் தனுஷுக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதரி நடிக்கிறார். இது குறித்து அதிதி கூறிய போது, தற்போது பெரிய படத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றுவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் அதிதி.
தனுஷ் நடிகர்களை புரிந்து கொள்ளக் கூடிய திறமை உண்டு என்பதால் சிறப்பான இயக்குனராக உள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் எடுக்கப்படுகிறது. எனக்கு இரண்டு மொழிகளுமே அவ்வளவாக பேச வராது. அது தான் எனக்கு சவால், என்றார்.