எலிய அமைப்பின் மாநாடு நேற்று கடுவல பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது,
அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து பேசி காலத்தைக் கடத்துகின்றனரே தவிர அபிவிருத்தியை எவ்வாறு முன்னெடுப்பது என்ற தெளிவு இந்த ஆட்சியாளர்களிடம் இல்லை.
எம்மைப் பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டுமே நல்லட்சியாளர்களிடம் உள்ளது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
மீண்டும் எமது ஆட்சியில் ஜனநாயகத்தை மக்கள் உணருவார்கள். கடந்த காலங்களில் விட்ட தவறுகளை மீண்டு இழைக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் அபிவிருத்திகளை தடுக்கின்றார். விமான நிலையம், துறைமுகம் அமைத்தது நாமாக இருந்தாலும் அவை அனைத்துமே இந்த நாட்டிற்கான வளங்களாகும்.
ஆனால் நாம் அவற்றைச் செய்த ஒரே காரணத்தினால் எம்மைப் பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த அபிவிருத்திகளை பிரதமர் தடுத்து வருகின்றார்.
இதனால் தான் எமது நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் உருவாகியுள்ளன. இந்த அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்கள் குறித்து பேசுகின்ற போதிலும் அதனை நடைமுறைப்படுத்தத் தெரியவில்லை. இன்று வரை பேசிக்கொண்டே உள்ளனர். ஆனால் நடைமுறைக்கு ஒன்றும் வரவில்லை என கூறியுள்ளார்.