ஒரு வழியாக தமிழ் பிக் பாஸ் நேற்றைய நாளோடு முடிவடைந்துள்ளது .ரித்திவிக்கா வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் இரண்டாவது பரிசு பெற்ற ஐஸ்வர்யா பற்றி ஒரு திடுக்கிடும் தகவல் கசிந்துள்ளது .
பெங்காலி பெண்ணான இவர் கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழ் மூலம் அதிக இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் .
தற்போது அவரை பற்றி ஒரு திடுக்கிடும் தகவல் வந்துள்ளது. அதாவது பிக்பாஸ் வீட்டில் தெரிந்தவர் யாருக்காவது போன் செய்து பேசலாம் என போட்டியாளர்களுக்கு சொல்லப்பட்டது. அதில் ஐஸ்வர்யா போன் செய்த நபர் கோபி. அந்த கோபி யார் என்ற விவரம் மக்களை ஷாக் ஆக்கியுள்ளது.
கோபி கோடிக்கணக்கில் பொதுமக்களின் பணத்தைச் சுருட்டிய குற்றச்சாட்டில் கைதாகி, சிறையில் இருந்துவிட்டு வெளியில் வந்திருக்கிறார். நிதி நிறுவனம் நடத்தி, குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கித் தருவதாக நூற்றுக்கணக்கானவர்களிடம் பல கோடி ரூபாயைச் சுருட்டியதாகக் கைது செய்யப்பட்டார். அவர் பண மோசடி செய்ய வைத்திருந்த கம்பெனியில் ஐஸ்வர்யாவும் ஒரு பார்ட்னராக இருந்துள்ளார்.
இந்த தகவலை பண மோசடியால் ஏமாற்றப்பட்ட ஒரு நபர் வெளியிட்டுள்ளார்.