செவனகல பிரதேசத்தின் வீடொன்றுக்கு நேற்றிரவு வந்த குழுவொன்று அங்கிருந்த தாய் , தந்தை மற்றும் அவர்களது 21 வயது மகளை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த அவர்கள் மூவரும் பிரதேசவாசிகளால் ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை , தாக்குதலை மேற்கொண்ட நபர்களுள் ஒருவர் டி56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குலுக்கு உள்ளான நபர்களின் காணியை பலாக்காரமான முறையில் கைப்பற்றுவதற்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் , குறித்த காணி தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையில் நீண்ட காலமாக நிலவிய தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கக் கூடும் என காவற்துறை சந்தேகிக்கின்றது.
சம்பவம் தொடர்பில் செவனகல காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.