மத்தியப்பிரதேசத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் நடைபெற்றது. அதில் ஒரு பேராசிரியர் ஏ.பி.வி.பி. ஊழியரின் காலில் விழுந்து பாதங்களை தொட்டு மரியாதையை செலுத்தினார்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள மண்ட்சோர் பகுதியில் அமைத்துள்ள PG கல்லூரியில் ABVP ஊழியர் ஒருவர் உரையாற்ற சென்றிருந்தார். ஆனால் கல்லூரியில் மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாது, கல்லூரி முன்பு நின்று முழக்கங்கள் எழுப்பியுள்ளனர்.
காரனம் என்னவென்றால், கடந்த புதன்கிழமை ABVP ஊழியர்கள் பிஜி கல்லூரியில் உள்ள வகுப்பு அறைக்கு முன்பு கோசங்கள் எழுப்பியுள்ளனர். அப்பொழுது தனது அறையில் இருந்து வெளியே வந்த பேராசிரியர் தினேஷ் குப்தா, ABVP மாணவர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. அது மட்டுமல்லாமல், ABVP அமைப்பை சேர்ந்தவர்கள் தேசவிரோத வழக்கு உங்கள் மீது போடுவோம் என பேராசிரியரை மிரட்டியதாக தெரிகிறது.
அப்பொழுது, குறித்த பேராசிரியர், ABVP அமைப்பை சேர்ந்தவர்களின் கால்களை பிடிக்க முற்ப்பட்டுள்ளார். இதைப்பார்த்த அவர்கள், அங்கிருத்து நகர தொடங்கியுள்ளனர். ஆனாலும் பேராசிரியர், அவர்களை விடாமல் கல்லூரியின் நுழைவாயில் வரை சென்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
குறித்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
@ABVPVoice अब आप यूं कहेंगे भारत माता की जय @RSSorg ये है युवा शक्ति? शर्मनाक! @BJP4India @BJP4India @INCMP @INCIndia @ndtvindia @shailendranrb @ajaiksaran @avinashonly @nsui @kidliberty @VTankha @VIVEKnsuibplmp @delayedjab @DeepakScribe @ManojSharmaBpl @brajeshabpnews pic.twitter.com/IaxnSLBdjC
— Anurag Dwary (@Anurag_Dwary) September 27, 2018