Loading...
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.
குருவிட்டயில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
Loading...
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பயங்கரவாத புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா தொடர்பான செய்திகளை அடிப்படையாகக்கொண்டே தேசிய பாதுகாப்பு தொடர்பாக சிலர் விமர்சித்து வருகின்றனர்.
அவ்வாறானதொரு நிலை இருக்குமானால் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். அரசாங்கம் என்றவகையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமே நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பொறுப்புக்கூற முடியும்’ என தெரிவித்துள்ளார்
Loading...