Loading...
தங்கத்தை விட மிகவும் மதிப்பு மிக்கதாக கருதப்படும் வைரம் குறித்த சுவாரஸ்மான 6 உண்மைகள் இருக்கின்றன.
வைரத்தின் மகிமைகள் ஆண்டாண்டு காலமாக போற்றப்பட்டு வருகின்றன. காதல், திருமணம், அதிஷ்டம், செல்வம், உள்ளிட்ட விஷயங்களோடு நிரந்தரமாகவே வைரமும் ஐக்கியமாகிவிட்டது.
வைரத்தின் வலிமை, அழகு, ஒளி விளைவிக்கும் தன்மை ஆகியவைகளினால் மதிக்கத்தக்க ஒரு செல்வமாக விளங்குகிறது.
Loading...
வைரத்தை ஆபரணமாக, பொருட்களை அறுக்க, தீய சக்திகளை துரத்துவதற்காக என பல வகைகளில் பயன்படுத்துகிறார்கள்.
வைரம் குறித்து பலரும் அறிந்திடாத 6 சுவாரஸ்யமான உண்மைகள்:
- பல நூறு கிலோமீட்டர் பூமிக்கு அடியில் உருவாகும் வைரக்கற்களை எரிமலை சீற்றங்கள் தான் மேற் பறப்புக்கு கொண்டு வருகின்றன.
- டைனோசர்கள் இந்த உலகில் நடமாடுவதற்கு முன்பே, வைரக் கற்கள் உருவாகிவிட்டன. உலகிலேயே இளமையான வைரக்கள் சுமார் 107 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாகும்.
- உலகியேலேயே மகக் கடினமான பொருள் வைரம் தான். பல நூறு வருடங்களுக்கு முன் பூமிக்கு அடியில் இருக்கும் பெரும் அழுத்தம் மற்றும் வெப்பநிலை காரணமாக கரிம பொருட்கள் இறுகி வைரமாய் உருவெடுத்தன.
- பண்டைய ரோம் மற்றும் கிரேக்கர்கள் வைரங்கள் கடவுளின் கண்ணீர், வானிலிருந்து விழும் நட்சத்திரங்களின் துகல்கள் என நம்பினார்களாம்.
- வைரம் மிக அரிதான பொருள் ஆகும். உலகில் மொத்தம் 50 இடங்களில் மட்டுமே வைரக்கற்கள் எடுக்க முடியும். தென் ஆப்ரிக்கா, ரஷ்யா, பாட்ஸ்வானா ஆகிய இடங்களில் வைரம் அதிகம் கிடைக்கின்றன.
- வைரக்கற்களின் அசல் பிறப்பிடம் இந்தியா நிலப்பகுதியாகும். 1400 ஆண்டுகளில் தொடங்கி இந்திய வைரங்கள் வெனிஸ் உள்ளிட்ட பல்வேறு ஐரேப்பிய பகுதிகளுக்கு வணிகம் செய்யப்பட்டன.
Loading...