தொடர்ந்து தொலைப்பேசியில் 20 முதல் 30 நிமிடம் வரை பேசினால் 10 ஆண்டுக்குள் மூளை புற்றுநோய் வரக்கூடும் என்று ஆய்வில், அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
மொபைல் இல்லாதவர்கள் என்பதே இல்லை, அதிலும் ஸ்மார்ட்போன் அனைவரிடத்திலும் உள்ளது. நேரில் சந்தித்து பேசுபவர்களை விட மொபைலில் கதைப்பவர்கள் தான் அதிகம்.
நாம் பலர் சொல்லியும் கேட்டிருக்கக் கூடும், ‘பேசுனா பேசிட்டே இருப்பான் நிறுத்தவே மாட்டான்’ இந்த வாக்கியம் பெரும்பாலும் அனைவரும் கேட்ட ஒன்றே.
ஆனால் தற்போது ஆய்வில் வெளியாகியுள்ள தகவலை கேட்டால் அதிர்ச்சி அளிக்கிறது. ஆம், மொபைலில் அதிக நேரம் பேசுபவர்களுக்கு 10 ஆண்டுக்குள் மூளையில் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது.
மொபைலில் இருந்து வரும் கதிர்வீச்சு மூளையை பாதிக்கும். அதனால் மொபைலில் அதிக நேரம் பேசுவதாலும், தூங்கும் போது மொபைல் போனை அருகில் வைத்து தூங்குவதாலும், கதிர்வீச்சின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
வீடுகளை சுற்றிலும், பணிபுரியும் அலுவலகம் சுற்றிலும் செல்போன் டவர்கள் அதிகம் இருக்கின்றன. அதில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு மனிதர்களை அதிகம் பாதிக்கிறது என்று ஆய்வில் கூறியுள்ளனர்.
1985-ம் ஆண்டு செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து தற்போது வரை மூளை புற்று நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் குழந்தைகள் 12 வயதுகுட்பட்ட குழந்தைகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.