இந்திய கிரிக்கெட் அணியின் அபாயகரமான பேட்ஸ்மேன் என்று வர்ணிக்கப்படும் வீரர் என்றால் அது சேவாக் மட்டும்தான். இவர் டெஸ்டில் இரண்டு முறை முச்சதம் அடித்து இருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 15 சதம் உள்பட 8,273 ஓட்டங்கள் எடுத்துள்ளதோடு, 104.33 ஸ்டிரைக் ரேட் வைத்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் சேவாக் இணையத்தள நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றியிருந்தார். அப்போது சேவாக்கிடம், கிரிக்கெட்டில் உங்களை அச்சுறுத்திய பவுலர் யாராவது இருக்கிறார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சேவாக், ‘நான் பயந்த ஒரே பவுலர் யார் என்றால் அது பாகிஸ்தானின் அதிவேக பந்துவீச்சாளர் சோயிப் அக்தர்தான். அவர் எந்த பந்தில் காலை பதம் பார்ப்பார், எந்த பந்தில் தலையை குறிவைப்பார் என்பது தெரியாது. அவர் வீசிய நிறைய பவுன்சர்கள் எனது ஹெல்மெட்டை தாக்கியுள்ளன. அவரை கண்டு நான் பயந்தேன். அதே சமயம் அவரது பந்துகளை அடித்தும் மகிழ்ந்துள்ளேன்’ என்று வினோதமாக கூறினார்.