Loading...
அவர் குண்டாக இருப்பதைப்பற்றி மற்றவர்கள் கவலைப்பட தேவையில்லை என நடிகை நித்யா மேனன் கடுப்பாக தெரிவித்துள்ளார்.
இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் குண்டாக இருப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதுகுறித்து நித்யா மேனன் கூறுகையில், ‘உடல் எடைகுறித்து சமூக வலைத்தளத்தில் விமர்சிக்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை.
Loading...
மற்றவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? எடையை குறைக்க நினைத்தால், ஒரு மாதம் போதும். பழைய ஹீரோயின்கள் குண்டாகத்தான் இருந்தார்கள். நடிப்புதான் முக்கியம். உடல் எடையல்ல’ என தெரிவித்துள்ளார்.
Loading...