தெலுங்கானாவில் ஒரே மாணவியை காதலித்த இரு மாணவர்கள் போதையில் ஒருவர் மேல் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜக்தியால் நகரில் உள்ள மிஷனரி பள்ளியில் மகேந்தர் மற்றும் ரவி ஒரே வகுப்பில் கல்வி கற்றனர். இருவரும் காதலித்த அந்த மாணவியும் அதே பள்ளியில் படித்து வந்துள்ளார்.
ஒருநாள் 16 வயதுள்ள இரு மாணவர்களும் மது அருந்திவிட்டு அந்த பெண்ணிற்காக தங்கள்மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு ஒருவருக்கொருவர் தீ பற்ற வைத்துக் கொண்டுள்ளனர்.
இதனால் மகேந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், ரவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவர்கள் தீக்குளித்த இடத்தில் பீர் பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பான விசாரணைகள் இடப்பெற்று வருகிறது.