அமெரிக்காவில் காதலன் நெருக்கமாக இருப்பதற்கு மறுத்ததால், காதலி அவரை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வெரோ பீச் என்ற பகுதியைச் சேர்ந்தவர் காதெரின் தவரெஸ். 27 வயதான இவரும் காதலனும் வீட்டில் ஒன்றாக இருந்துள்ளனர்.
அப்போது காதெரின் மது அருந்தியுள்ளார். இதையடுத்து காதலனுடன் உல்லாசமாக இருக்க ஆசைபட்டுள்ளார். ஆனால் காதலன் அதற்கு மறுத்ததால், ஆத்திரமடைந்த இவர் பெரிய கத்தியால் காதலனின் முகத்தில் பல முறை சரமாரியாக குத்தியுள்ளார்.
இந்நிலையில் இரத்த வெள்ளத்தில் துடித்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.அவரின் முகத்தில் காயங்கள் கடுமையாக இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து போலிசாரால் காதலி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.