பிரான்சின் புகழ்பெற்ற பாடகரான Charles Aznavour திங்கட்கிழமை ஒக்டோபர் 1 ஆம் திகதி தனது 94 வயது வயதில் மரணமடைந்தார்.
இவரது La Bohème, Emmenez-moi போன்ற பாடல்கள் மிகப்பெரிய வெற்றிப்பாடல்களாக அமைந்தன. இவர் ஆர்மேனிய நாட்டில் மே 22, 1924 ஆம் ஆண்டு பிறந்தவர். ஆனால் சிறு வயது முதலே பரிசில் வசித்து வந்தார். பரிசிலேயே கல்வி கற்று, தனது இசை திறமையையும் வளர்த்துக்கொண்டார். இவர் தனது 94 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். முதுமையின் காரணமாக ஏற்பட்ட இயற்கை மரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இவருடைய குரலுக்காக பெரிதும் விமர்சிக்கப்பட்டார்.
‘இங்கு உள்ள அனைத்துமே எனக்கு எதிராக இருந்தது, நான் மிகவும் கோபம் கொண்டவன். ஆனால் யார் மீதும் இல்லை, எதன் மீதும் இல்லை. ஆனாலும் நான் எப்போதும் கோபமாகவே இருப்பேன். இந்த கோபமே என்னை இயங்க வைக்கிறது, தொடர்ந்து செயற்பட வைக்கிறது’ என 1963 ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில் Charles Aznavour தெரிவித்திருந்தார்.