நேற்று முன்தினம் Saint-Martin தீவுக்கு பயணமாகிய போது எடுத்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் புகைப்படம் ஒன்று பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
Saint-Martin தீவில் மிகப்பெரும் சூறாவளி அடித்து ஒருவருடங்களின் பின்னர் அங்கு சென்றுள்ளார் மக்ரோன். இம்மானுவல் மக்ரோனுக்கு அருகே மேலாடை இன்றி, அத்தீவின் புகழ்பெற்ற சொல்லிசை பாடகர் ஒருவரும் மற்றொரு நபரும் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் இரண்டாம் இளைஞன் ‘நடுவிரலை’ காண்பித்துக் கொண்டிருப்பதே சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இது தொடர்பாக அரசியல் தலைவர் மரீன்-லூ-பென், “இது பிரான்சின் மிகப்பெரிய அவமானம். எனது கோபத்தை தெரிவிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. பிரான்ஸ் நிச்சயம் இதை மறக்காது!’ என தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக, இளைஞன் ஒருவர் ஜனாதிபதியின் பெயரை சுருக்கி ‘மனு’ என அழைத்ததற்கு மக்ரோன் கோபமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.