சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் மிக தைரியமாக பல கருத்துக்களை கூறியுள்ளார். அவர் அரசியல் பற்றி மறைமுகமாக கூறிய கருத்துக்களை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
விழாவில் விஜய் ஒரு குட்டி கதை சொன்னார்..
“ஒரு மன்னர் தனது சிப்பாய்களுடன் ஊர்வலம் சென்றார். அப்போது அவருக்கு சிப்பாய் ஒருவர் எலுமிச்சை சாறு வழங்கினார். மன்னரோ உப்பு பத்தவில்லை. உப்பு வாங்கி வா என சிப்பாயிடம் சொன்னார். சிப்பாயோ உப்பு எதற்கு வாங்கிக்கொண்டு நான் கடைத்தெருவில் கொஞ்சம் எடுத்து வருகிறேன் என்றார்.”
“மன்னரோ காசைக் கொடுத்து வாங்கி வரவும் எனக் கட்டளையிட்டார். அது ஏன் என சிப்பாய் கேட்டதற்கு ‘நான் காசு கொடுத்து வாங்காமல் எடுத்து வரச்சொன்னால் எனக்கு பின்னால் வரும் பரிவாரம் இந்த கடைத்தெருவையே காலி செய்துவிடும்.”
“அது போல மேலே இருக்கும் தலைமை சரியாக இருந்தால் ஒரு மாநிலமும் ஆட்டோமேட்டிக்கா நல்லா இருக்கும். இங்க பர்த் சர்டிபிகேட் வாங்குதுல இருந்து டெத் சர்டிபிகேட் வாங்குறவரை எல்லாத்துக்கும் பணம் தேவை. நியாயம் தான் ஜெயிக்கும். ஆனா கொஞ்சம் லேட் ஆகும். இங்கே நெருக்கடி வரும்போது நல்ல தலைவர் தானா வருவாங்க. அதான் இயற்கை” என விஜய் கூறியுள்ளார்.