Loading...
அரசாங்கத்திற்கு சொந்தமான வயல் காணி ஒன்றில் சட்டவிரோதமாக பயிர்ச்செய்கை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர குமார அபேசேகர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம் சிலாபம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.இதன்போது அவர் ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.
Loading...
சிலாபம் – முன்னேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான வயல் காணி ஒன்றை சட்டவிரோதமாக சுத்தப்படுத்தி தேங்காய் மரங்கள் மற்றும் வாழை கன்றுகள் என்பவற்றை நாட்டியிருந்ததாக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடதக்கது.
Loading...