பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கையை விமர்சிக்கும் போது அதனால், ஜனாதிபதியும் அமைச்சர்களும் தான் சிக்கலில் மாட்டி கொள்கின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் காரணமாக எழுந்துள்ள ஸ்திரமற்ற சூழ்நிலையை சமாளிக்கும் வண்ணம் பொலிஸ் மா அதிபர் உட்பட பொலிஸ் திணைக்களம் என்பன மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாக சிலரினால் முன்னெடுக்கப்படும் அறிவிப்புக்களை ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி அமைச்சரவை சந்திப்பில் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.