Loading...
முல்லைத்தீவு குருந்தூர் மலைக்கு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சென்றதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களான முசமில் பத்ம உதயசாந்த மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோர், முல்லைத்தீவு குருந்தூர் மலைக்கு இன்று சென்றனர்.
Loading...
இவர்களுடன், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் பெரும்பான்மை இன மக்களும், குருந்தூர் மலைக்குச் சென்றுள்ளனர்.
வெலிஓயா பகுதியில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றுக்காக முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டு வந்துள்ள குறித்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும், குருந்தூர் மலைக்கு சென்று, நிலைமைகளைப் பார்வையிட்டு திரும்பியுள்ளனர்.
Loading...