இந்த தகவல் பொதுமக்களை பயமுறுத்துவதற்காக அல்ல. மழையின் பாதிப்புகள் ஏற்படாதவாறு தங்களை தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வுக்காகவே. ஆம். கேரளம் தாங்கிய மழை வெள்ளத்தைக்காட்டிலும் அதிக அளவு மழை கிட்டத்தட்ட இரு மடங்கு மழை தமிழகத்தில் பெய்யவுள்ளதாக வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்ற முறை சென்னையில் ஏற்பட்ட வெள்ளைத்தை விட இரு மடங்கு அதிக வெள்ளம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. சுற்றுலா பயணிகளின் எச்சரிக்கைக்காக தமிழகத்தில் கீழ்கண்ட இடங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள் சற்று முன்னெச்சரிக்கையுடன் செல்லவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அடை மழை, பேய் மழை, பிரளயம் என எந்த வார்த்தைகளில் சொன்னாலும் இந்த மாதம் பெய்யவுள்ள மழை தமிழகத்துக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தவாய்ப்பிருக்கிறது. எந்தெந்த இடங்களிலெல்லாம் அதிக அளவு மழை பெய்யவாய்ப்பிருக்கிறது.இலங்கையிலும் கொழும்பு வடக்கு பக்கங்களில் அதிகமழை பெய்ய வாய்ப்புள்ளது
நாகப்பட்டினம்
இதில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. கணிப்பின்படி, 924 மில்லிமீட்டருக்கு மேல் நிச்சயம் மழை பெய்யும் என்று கூறப்பட்டிருக்கிறது.
சுற்றுலா பயணிகளின் கவனத்துக்கு
நாகப்பட்டினம் நகரம் சென்னையிலிருந்து 270 கிலோமீட்டர் தூரத்தில் தஞ்சாவூருக்கு வெகு அருகில் அமைந்துள்ளது. நாகப்பட்டினத்தில் பெய்யும் மழையால் சுற்றுலா செல்லும் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
அதிகம் பாதிக்கப்படும் சுற்றுலாத் தளங்கள் வேதாரண்யம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் ஆறுமுகசாமி கோவில் காயாரோகணேஸ்வரர் கோவில் கோடியக்கரை சௌந்தர்யராஜபெருமாள் கோவில் டச்சிக் கோட்டை மேலும் இதன் அருகாமையில் இருக்கும் இடங்களுக்கு இந்த மாதத்தில் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
சென்னை இரு வருடங்களுக்கு முன் நிகழ்ந்த சென்னை வெள்ளத்திலிருந்தே இப்போதுதான் மீண்டு வந்திருக்கிறார்கள் மக்கள். அதிக அளவு பாதிப்பை கொண்ட சென்னையும் கடலூரும் மீண்டும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருப்பதாக கோவை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
சென்னையில் அதிகம் பாதிக்கப்படும் இடங்கள் சென்னை மாநகரின் 306 இடங்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகும் இடங்களாக பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது. முக்கியமாக வேளச்சேரி, அடையாறு, சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், பெருங்களத்தூர், பள்ளிக்கரணை ஆகிய இடங்கள் பாதிப்புக்குள்ளாகும்.
கிண்டி, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, சேப்பாக்கம் மற்றும் ராயப்பேட்டை ஆகிய இடங்களும் மிக அதிகமாக பாதிக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது. மழையிலிருந்து நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடமும், அதற்கான நடவடிக்கைகளை இப்போதே துரிதப் படுத்த அரசும் முன்வரவேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் சுற்றுலா கடலூர் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் சுற்றுலா செல்ல ஏதுவான இடங்கள் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் பூவராக சுவாமி கோவில் கடல் துறைமுகம் புனித டேவிட் கோட்டை சில்வர் பீச் பாடலீஸ்வரர் கோவில் பிச்சாவரம் ஏரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்கள் மற்றும் திட்டமிட்டிருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுங்கள்.
நீலகிரி
சென்னைக்கு ஏற்படவுள்ள வெள்ளம் போல சற்றும் குறையாமல் நீலகிரிக்கும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளுக்கும் மழை அடித்து துவைத்து காயப் போடப் போகிறது. இதனால் அதிக அளவில் வெள்ளம் ஏற்படாவிட்டாலும், அங்கே நிலச்சரிவு, வரலாறு காணாத மழை, காற்று என பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். நிச்சயமாக சுற்றுலா பயணிகள் நிலச்சரிவு போன்றவற்றில் மிக அதிக கவனம் கொள்ளவேண்டும்.
பாதிக்கப்படும் பகுதிகள் நீலகிரி மாவட்டத்தின் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி மற்றும் அதன் அருகாமை பகுதிகள்.கோவை நீலகிரியில் ஏற்படும் வெள்ளம் கரைபுரண்டோடி கோவை மாவட்டத்தின் கரைகளில் வந்து கொட்டும்.
இதுவே மழை வெள்ளத்துக்கு ஒரு காரணமாக அமையும்,. அதே நேரத்தில் கோவை பகுதிகளிலும் கனமழை கொட்டும். இதனால் வரலாறு காணாத அளவில் இந்த பகுதிகள் மழை வெள்ளத்தில் சூழ வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் பகுதிகளும் இந்த மழையால் பெருமளவு பாதிக்கப்படுகிறது.
கோவை
நீலகிரியில் ஏற்படும் வெள்ளம் கரைபுரண்டோடி கோவை மாவட்டத்தின் கரைகளில் வந்து கொட்டும். இதுவே மழை வெள்ளத்துக்கு ஒரு காரணமாக அமையும்,. அதே நேரத்தில் கோவை பகுதிகளிலும் கனமழை கொட்டும். இதனால் வரலாறு காணாத அளவில் இந்த பகுதிகள் மழை வெள்ளத்தில் சூழ வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் பகுதிகளும் இந்த மழையால் பெருமளவு பாதிக்கப்படுகிறது.