யாழில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்காத யாழ்.பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய 17 பொலிஸ் அதிகாரிகளுக்க இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது
வட.மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் இவர்களுககு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்.நகரப் பகுதியிலுள்ள கடையொன்றில் கடந்த 24ஆம் திகதி 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டன.
அது குறித்து மறுநாள் கடை உரிமையாளரால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும், எவ்வி நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென வட. மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கடை உரிமையாளர் கொண்டுசென்றார்.
அதனையடுத்து யாழ்.மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் குழுவொன்றை அமைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, திருட்டுச்சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு பதிவேட்டு புத்தகத்தில் வெளிச்செல்லும் பதிவு எதனையும் மேற்கொள்ளாது சார்ஜன்ட் தர உத்தியோகத்தர் ஒருவர் சென்றமை, அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறிப்புகளை தாமதமாக குற்றப்பதிவேட்டு புத்தகத்தில் ஒட்டியமை போன்ற விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதனடிப்படையிலேயே குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.