Loading...
கனடாவில் நேற்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் தமிழக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
தமிழகத்தின் கோயம்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நவீன் ராஜ்.24 வயதான இவர் கனடாவின் Oshawa பகுதியில் உள்ள Durham கல்லூரியில் MBA படித்து வந்துள்ளார்.
படிப்பிற்கு இடையே அவர் பகுதி நேர வேலையாக அங்கிருக்கும் பிட்சா கடையிலும் வேலை பார்த்து வந்துள்ளார்.
Loading...
இந்நிலையில் நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 2 மணிக்கு நவீன் பயணித்த காரும், மற்றுமொரு கார் மோதுண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தநிலையில் விபத்துடன் தொடர்புடைய 36 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...