கட்டாரிற்கான இலங்கை தூதுவர் ஏஎஸ்பி லியனகே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரு புதல்வர்களும் கட்டாரிற்கு விஜயம் செய்தவேளை அவர்களை வரவேற்றுள்ளார்.
சிஎச் ரக்பி அணி கட்டார் சென்றவேளை மகிந்த ராஜபக்சவின் இரு புதல்வர்களையும் ஏஎஸ் லியனகே வரவேற்றுள்ளதுடன் அவர்களின் பயணப்பொதிகளை காவிச்சென்றுள்ளார்.
தூதுவர் ரோகித ராஜபக்சவின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும் அதேவேளை அமைச்சர் ராஜிதவின் நெருங்கிய சகாவான தனசூரிய யோசிதவின் பணயப்பொதிகளுடன் காணப்படுகின்றார்.
அதன் பின்னர் தூதுவர் மகிந்த ராஜபக்சவின் இரு புதல்வர்களையும் மெர்குரே கிராண்ட் ஹோட்டலிற்கு அழைத்துச்சென்றுள்ளார் .
மகிந்த ராஜபக்சவின் இரு புதல்வர்களும் அரசாங்கத்தில் எந்த வித முக்கிய பதவிகளையும் வகிக்காததால் இந்த நடவடிக்கை இராஜதந்திர நடைமுறைகளிற்கு முரணானது.
கட்டாரிற்கான இலங்கை தூதுவர் முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய சகா என்பதுடன் முன்னாள் ஜனாதிபதியின் தோல்விக்கு பின்னர் அவரிற்கு தனது பீக்கொக் மாளிகையை வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.