தற்போது நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது
இலங்கைக்கு அருகே கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை இதற்கு காரணமாகும்.
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், இடி மின்னல்களினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.