ஆண் , பெண் இரு பாலருக்கும் முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் தோன்றுவதென்பது பொதுவான விடயம் தான். அதற்கு இலகுவாக பல தீர்வுகளும் உண்டு.
பருக்களை ஒரு சிலர்நகங்களை கொண்டும் காயப்படுத்துவதனால் வடுக்கள் ஏற்பட்டுவிடும்.
வடுக்கள் முகத்தின் அழகை பாதிப்பதாக இருக்கும்.
இதனை கண்ணாடியில் பார்த்து மனவேதனை படுவது, மன ரீதியில் பாதிப்பை ஏற்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அழகினை கெடுககும் வடுக்களை வீட்டில் உபயோகப்படுத்தும் பொருட்களை கொண்டே எவ்வாறு மாற்றிக்கொள் முடியும்.
தேயிலை செடி எண்ணெய்
தேயிலை செடி மூலம் தயாரிக்கப்படும் எண்ணெயை பயன்படுத்தலாம்.
சிறிது தேயிலை செடி எண்ணையை பஞ்சு உருண்டைகளில் நனைத்து சருமத்தின் மீது தடவுங்கள்
அது ANTI BACTERIAL பண்புகளை ஏராளமான அளவில் கொண்டுள்ளது.
சரும பிரச்சனைகளைப் போக்க பயன்படுத்தலாம்.
அது, பாதிக்கப்பட்ட சரும செல்களை புதுப்பிக்கும்.
சருமம் அழகாக காட்சியளிக்க உதவும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா ஒரு சுத்தமாக்கும் கிளென்சிங் பொருளாகும்.
பாக்டீரியாக்கள், கிருமிகள், அதிகப்படியான எண்ணெய் பசை போக்கும்.
தழும்பு மற்றும் கரும்புள்ளி பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவும்.
பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, பருக்கள் மீது தடவினால் போதும்.
உப்பு
சமையல் உப்பானது தழும்புகளை எளிதில் எதிர்த்துப் போராடும்.
உப்பைக் கொண்டு பராமரித்தால்,பருக்களை பரவ விடாமல் தடுக்கும்.
உப்பை நீரில் கலந்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவ வேண்டும்.
சிறிது நேரம் கழித்து நீரால் அப்பகுதியைத் தேய்த்து கழுவுங்கள்.