மத்தியப் பிரதேசத்தில் 5 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு கோயில் பூசாரிகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.
த்தியப் பிரதேச மாநிலம் தாட்டியா என்ற இடத்தில் 5 வயதான குழந்தையை பாலியன் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த ராஜூ பண்டிட் (55) மற்றும் பட்டோலி பிரஜாபதி (45) ஆகியோரைக் பொலிசார் செவ்வாயக்கிழமை கைது செய்துள்ளனர்.
கோயில் பூசாரிகளாக பணிபுரியும் இவர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இனிப்புப் பண்டத்தில் மயக்க மருந்தைக் கொடுத்து உண்ண வைத்திருக்கின்றனர். அதைச் சாப்பிட்டு மயங்கிய குழந்தையை வன்புணர்வு செய்து, குழந்தையின் வீட்டின் முன்பே போட்டு சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குழந்தை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கைதான பூசாரிகள் மீது பாலியன் வன்கொடுமைக்கு எதிரான இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376ன் கீழ் கோராகட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.