தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 8ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை வரை வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்து வருகிறது
இந்நிலையில் வரும் 7ஆம் தேதி தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம் இதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக கூறினார்.
அடுத்த 2 அல்லது 3 நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் புயலாக உருவெடுக்கும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஓமன் நோக்கி வடமேற்கு திசையில் நகரும்.