அரியானா மாநிலம், கைதால் மாவட்டத்தில் உள்ள சர்பஞ் எனும் கிராமத்தை சேர்ந்தவர் லீலா. அவரது கணவர் உடல்நலம் சரியில்லாமல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மரணடைந்தார்.
இவர்களுக்கு 16 வயதில் பத்மினி என்ற மகள் உள்ளார். இவர்கள் இருவரும் அங்கு கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தாய், மகள் இருவரையும் பொலிசார் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து விசாரணை என்ற பெயரில் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு அடிக்கடி வரவழைத்த பொலிசார், துணை காவல் ஆய்வாளர் ஒருவருடன் சேர்ந்து தலைமை காவலர் மற்றும் காவலர் அந்தஸ்தில் உள்ள 7 பொலிஸ் அதிகாரிகள், தாயை கற்பழித்துள்ளனர்.
மேலும், அவரது 16 வயது மகளையும் சீரழித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மேலும் 11 பேர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அந்த சிறுமி தங்கள் இருவருக்கும் நடந்த கொடுமைகள் குறித்து உயர் பொலிஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த 18 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் தான் அரியானா மாநிலத்தில், சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்து ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் தாயையும் மகளையும் பொலிஸ் அதிகாரிகளே கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.