தற்போது நாட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவமாக கர்ப்பணியான கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரின் உயிரிழப்பு சம்பவம் காணப்படுகிறது
குறித்த பெண் உயிரிழப்பிற்கு பின்னர், அவர் மன விரக்தியில் இருந்துள்ளதாக பலரும் தெரிவிப்பதுடன், அவர் இதனால் தற்கொலை எனும் முடிவினை நாடியிருக்க சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் விடுமுறை எடுத்துவிட்டு, கணவனை பார்ப்பதற்கு செல்வதாக கூறிச்சென்ற குறித்த பெண் யுத்தத்தை எதிர் கொண்ட பிரதேசத்தில் பிறந்து வாழ்ந்து வருபவர் என்பதால் சிறு சிறு பிரச்சினைகளுக்காக தவறான முடிவு எடுக்குமளவு கோழையல்ல என அந்த பெண் தொடர்பில் தெரிந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில் கொலை, தற்கொலை என்ற ரீதியில் மாத்திரமல்லாது வேறொரு கோணத்திலும் இந்த சம்பவத்தின் விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்றொரு கருத்தினை சமூக ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.
அதாவது 2 தொடக்கம் 4 மாத காலப்பகுதியில் பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு தலைசுற்றல், மயக்கம், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்த சந்தர்ப்பத்தில் குறித்த விரிவுரையாளர் மூன்று மாத கர்ப்பிணி என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எனவே தனது வீட்டிற்கு செல்லும் வழியில் உயிரிழந்த பெண், தன் மன விரக்தியை போக்குவதற்காக கடற்கரைக்கு சென்றிருக்கலாம்.
“இடிவித்தான்” எனப்படுவது சில கடற்கரைகளில் கரை மிகவும் ஆழமாக உள்ள இடமாகும். இதனால் அந்த பெண் கடற்கரையை பார்வையிட்டுக் கொண்டிருந்த குறித்த ஆழமான கரைப்பகுதியில் மயக்கமடைந்து விழுந்ததில் நீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றவாறு காணப்படுகிறது சமூக ஆய்வாளர்களின் கருத்து.
அத்துடன் குறித்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் நீரில் மூழ்கியதால் தான் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளதால் இந்த வகையிலும் விசாரணைகளை முன்னெடுக்கலாம் என கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன.
விசாரணைகள் எந்த விதத்தில் அமையும் என்பது கேள்விக்குறியாகவுள்ள இந்த சந்தர்ப்பத்தில் குறித்த பெண் வீட்டிற்கு செல்வதற்காக ஏறிய முச்சக்கரவண்டியின் சாரதியை கண்டறிந்து விசாரணை நடத்தினால் தெளிவான தடயம் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது.