லண்டன் ரயில் ஒன்றில் சூனியக்காரி ஒருவர் பயணிப்பதை ஆச்சரியத்துடனும், அச்சத்துடனும் பயணிகள் பார்த்தனர்.
சூனியக்காரி போல் அச்சு அசலான தோற்றத்துடன் கையில் ஒரு பொம்மையுடன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஒரு பெண் ஆடிக் கொண்டிருந்தார்.
அதேபோல் பயணி ஒருவர், ரயிலில் முறைத்துப் பார்த்துக் கொண்டு அந்த சூனியக்காரி நிற்பதை எடுத்த வீடியோவை வெளியிட்டு, இனி இந்த ரயிலில் பயணிக்க மாட்டேன் என்று பதிவிட, அந்த வீடியோ வேகமாக பரவத் தொடங்கியது.
பின்னர் விசாரித்ததில், வரும் ஹாலோவீன் பண்டிகைக்காக ஒரு அமைப்பு பல அச்சுறுத்தும் உருவங்களை உருவாக்கி வருவதும், அவை மக்களிடையே எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை சோதிப்பதற்காகவே இவ்வாறு செய்ததும் தெரியவந்துள்ளது.
அந்த அமைப்பின் மார்க்கெட்டிங் மேனேஜரான Rosalind Brown கூறும்போது, ஹாலோவீனுக்காக பொது இடங்களில் இவ்வாறு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவது மிகவும் த்ரில்லிங்காக இருக்கிறது.
இந்த பிணம் தின்னும் சூனியக்காரி நிச்சயம் நாங்கள் வைத்த தேர்வில் தேறிவிட்டார், என்றாலும் இது ஒரு சாம்பிள்தான், ஹாலோவீனுக்கு இதுபோல் பல ஆச்சரியங்களை வைத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.