07-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 21ம் திகதி, மொகரம் 26ம் திகதி, 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி மதியம் 1:11 வரை; அதன் பின் சதுர்த்தசி திதி பூரம் நட்சத்திரம் மதியம் 3:14 வரை; அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்த-அமிர்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30 – 6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00 – 1:30 மணி
* குளிகை : மதியம் 3:00 – 4:30 மணி
* சூலம் : மேற்கு
* பரிகாரம் : வெல்லம்
* சந்திராஷ்டமம் : அவிட்டம், சதயம்
* பொது : மாத சிவராத்திரி, சிவன், சூரியன் வழிபாடு.
மேஷம்:
உங்களிடம் உதவி பெற்றவர் உதாசீனமாக நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி படிப்படியாக நிறைவேறும். லாபம் சீராக இருக்கும். பெண்களுக்கு வீட்டுச்செலவு அதிகரிக்கும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
ரிஷபம்:
திட்டமிட்ட பணிகளில் மாற்றம் செய்வீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பெண்களுக்கு பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. உணவுப் பொருள் தரம் அறிந்து உண்ணவும்.
மிதுனம்:
இஷ்ட தெய்வ அருளால் வாழ்வு சிறக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திபணி மேற்கொள்வீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பெண்கள் விருந்து விழாவில் பங்கேற்பர். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
கடகம்:
வெளி வட்டார தொடர்பால் சிரமம் ஏற்படலாம். மவுனம் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாக்கவும். சேமிப்பு திடீர் செலவால் கரையும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல் ஏற்படலாம்.
சிம்மம்:
மனதில் தன்மான உணர்வு அதிகரிக்கும். உறவினரின் தேவையறிந்து உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆதாயம் உயரும். கூடுதல் சொத்து சேர்க்கை பெற அனுகூலம் உண்டு. பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.
கன்னி:
அக்கம் பக்கத்தினருடன் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் பணிபுரிவது அவசியம். சேமிப்பு அத்யாவசியச் செலவுக்கு பயன்படும். பெண்கள் ஒவ்வாத அழகு சாதனப் பொருள் பயன்படுத்த வேண்டாம்.
துலாம்:
நற்செயல்களில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள் .தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். அபரிமிதமான அளவில் பணவரவு கிடைக்கும். பெண்களுக்கு பொன், பொருள் சேரும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
விருச்சிகம்:
பயனறிந்து பேசி நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க புதிய செயல் திட்டம் உருவாக்குவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்கள் விரும்பிய உணவு உண்டு மகிழ்வர். பணியாளர்கள் நிர்வாகத்தின் நன்மதிப்பை பெறுவர்.
தனுசு:
உங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் குளறு படி படிப்படியாக சரியாகும். லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் வீட்டுச்செலவில் சிக்கனத்தை கடைபிடிப்பர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
மகரம்:
புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். சுபவிஷயத்தில் இடையூறு விலகி நன்மை உண்டா கும்.தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பெண்கள் அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பாதுகாக்கவும்.
கும்பம்:
மனதில் புத்துணர்வு பெருகும். புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி உண்டாகும். தாராள வரவால் சேமிப்பு உயரும். பணியாளர் கள் நிர்வாகத்தினரின் பாராட்டு, வெகுமதி பெறுவர்.
மீனம்:
பேச்சு, செயலில் புத்துணர்வு வெளிப்படும். சமூகத்தின் பார்வையில் நன்மதிப்பு பெறு வீர்கள். தொழில், வியாபாரத்தில், அபிவிருத்திப்பணி செய்வீர்கள். ஆதாயம் அதிகரிக்கும். பிள்ளைகள் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள்.