வடமராட்சி கிழக்குப் பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட நிர்வாக பகுதிக்குள் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பவர்களை யும் 48 மணி நேரத்தில் வெளியேறுமாறு பிரதேச செயலர் அறிவித்தல் விடுத்த நிலையில் பெரும்பாலான வாடிகள் அகற்றப்பட்டு வெளியேறிவருவதாக வடமராட்சி கிழக்கு சமாசத் தலைவர் தெரிவித்தார்.
வடமராட்சி கிழக்கில் தங்கி நின்று கடலட்டைத் தொழிலில் ஈடுபடும் வெளி மாவட்டத்தவர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் அரச நிலத்தை அனுமதியின்றி ஆக்கிரமித்து வாடி அமைத்துத் தங்கியிருந்தனர்.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற எல்லைக்குள் வாடி அமைத்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. தங்கியிருந்த மீனவர்களை உடன் வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து மீனவர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.
வடமராட்சி கிழக்குப் பகுதியின் பருத்தித்துறை நீதிமன்ற எல்லைப்பரப்புக்குள் தொழிலில் ஈடுபடும் வெளிமாவட்ட மீனவர்கள் தொடர்ந்தும் அரச நிலத்தில் அனுமதியின்றி தங்கியிருந்து கடல் அட்டை பிடிப்பதனால் அவர்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யும் வகையில் பிரதேச செயல ரினால் அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து வெளிமாவட்ட மீனவர்கள் வெளியேறி வருகின்றனர்.