Loading...
சிறுமிகளுக்கான பாலியல் தொல்லை அதிகமாகி கொண்டே வருகிறது.
தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு மாணவியை பாலியல் கொடுமையில் ஈடுபட்டு கர்ப்பமாக்கியவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான். கோட்டூர் சன்னதி தெருவை சேர்ந்தவர் ரவிபிரகாஷ் என்ற கூலித்தொழிலாளிக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆனநிலையில், இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
Loading...
இந்நிலையில் ரவிபிரகாஷ் வீட்டின் அருகே 10ம் வகுப்பு படித்து வரும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து,ரவிபிரகாஷ் பாலியல் கொடுமையில் ஈடுபட்டதில் மாணவி கர்ப்பமானார். இதனால் அவமானமடைந்த சிறுமியும், அவரது தந்தையும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டுர் பொலிசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் ரவிபிரகாஷைக் கைது செய்தனர்.
Loading...