ஸ்ரீ ரெட்டி என்றால் யார் என எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அப்படியாக சமீபத்தில் அதிக பிரபலமாகிவிட்டார். பலருக்கும் அவர் சமூகவலைதளத்தில் பதிலடி கொடுத்து வருகிறார்.
அண்மையில் ஹிந்தியில் நடிகை தனுஸ்ரீ பிரபல நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இது பெரும் சர்ச்சையானது. நடிகை மீது எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.
இவ்விசயத்தில் நடிகர் அமிதாப் பச்சன், அமீர் கான் ஆகீயோரை தாக்கி தற்போது ஸ்ரீ ரெட்டி கருத்து பதிவிட்டுள்ளார். ஆமீர்கானிடம் இதுபோன்ற பதிலை எதிர்பார்க்கவில்லை.
வாழ்க்கையில் நடிப்பதை நிறுத்துங்கள் ஜி, அமிதாப் ஜி இது போன்ற பெண்களில் உங்கள் பேத்தியை நீங்கள் பார்க்கவில்லையா? பெண்களை மதிக்க முடியாவிட்டால் நீங்கள் எந்த இந்திய தயாரிப்பையும் விளம்பரத்தக்கூடிய தகுதி உங்களுக்கு இல்லை. தனுஸ்ரீ விவகாரத்தில் நீங்கள் கலந்துகொண்டது அதிர்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார்