அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, மகிந்த அணியுடன் இணைந்து இடைக்கால அரசு அமைக்க முயற்சிக்கின்றார் என்ற தகவல் வெளிவந்துள்ள சூழலில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.
இதேவேளை, இப்படியொரு சந்திப்பு தனது வீட்டில் நடைபெறவில்லை என்பதை மாத்திரம் எஸ்.பி.திசநாயக்க மறுத்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.