நானா படேகர் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என்று தனியார் தொலைக்காட்சியின் நேர்காணல் ஒன்றில் தனுஸ்ரீ தத்தா தெரிவித்திருந்தார்.
அதில், கடந்த 2008- ம் ஆண்டு `ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது, தகாத இடங்களில் நானா படேகர் கை வைத்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த நானா படேகர், “நான் 2008 –ம் ஆண்டே இந்த சர்ச்சைக்கு பதிலளித்துவிட்டேன்” என்று கூறினார்.
தனுஸ்ரீ தன் மகள் வயதுடையவர் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். திரைத்துறையில் 35 ஆண்டு காலத்தில் யாரும் தன்னை குற்றம் சாட்டியதில்லை என்றவர், தன் மீது குற்றம்சாட்ட தனுஸ்ரீயை தூண்டியது யார் என்பது தனக்கு தெரியவில்லை என்றும் பதிலளித்தார்.
இந்நிலையில், பாலியல் புகாரில் பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தியில் ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டபோது, நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தனுஸ்ரீ அளித்த புகாரின்பேரில், மும்பை ஒஷிவாரா காவல்நிலையத்தில் நானா படேகர், ஒளிப்பதிவாளர் கணேஷ் ஆச்சார்யா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.