இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி, மனைவிக்காக அசைவகத்திலிருந்து, சைவ உணவுக்கு மாறிவிட்டாராம்.
இந்திய அணியில் பிட்டான வீரர்களில் விராட் கோஹ்லியும் ஒருவர், இந்நிலையில் கோஹ்லி அசைவத்திலிருந்து, சைவ உணவுப் பழக்கவழக்கத்துக்கு மாறியுள்ளார்.
அவருடைய மனைவியான அனுஷ்கா சர்மா ஏற்கனவே சைவத்திற்கு மாறிவிட்ட நிலையில், கோஹ்லியை நீண்ட நாட்களாக சைவத்து மாறும் படி கூறி வந்துள்ளார்.
இதனால் கோஹ்லி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறியுள்ளார். சைவத்திற்கு மாறியுள்ளதால், அவர் முன்பை விட தற்போது மிகவும் புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வலிமையாக அவர் இருப்பதாகவும் அவர் உணருகிறாராம்.
அவருடைய மனைவி அனுஷ்கா ஷர்மா ஏற்கனவே சைவத்துக்கு மாறிவிட்ட நிலையில், விராட் கோலியையும் மாறும்படி நீண்ட நாட்களாக சொல்லி வந்தாராம்.
முன்பெல்லாம் புரோட்டீன் சத்துக்காக முட்டை, இறைச்சி எல்லாம் சாப்பிட்டு வந்த அவர், தற்போது அவை அனைத்தையும் கைவிட்டுள்ளார்.