Loading...
தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுவது குறித்த எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதையடுத்து, தமிழக, கேரள மாநிலங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் இடத்திற்கு ஹெலிகாப்டரில் பறந்தவாறு சென்று ஒலிபெருக்கி மூலம் கடலோர காவல்படை வீரர்கள் அறிவுறுத்தினர்.
Loading...
இதனையடுத்து, மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர். கடல் சீற்றம் ஏற்படக் கூடும் என்பதால், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு கடலோர காவல்படை வீரர்கள் நேரில் அறிவுறுத்தியுள்ளனர்.
Loading...