மனிதர்கள் வாழும் காலம் வரை உடல் ஆரோக்கியத்துடன் வாழவே விரும்புவார்கள்.
அப்படி நாம் தினம் உண்ணும் உணவுடன் சில முக்கிய காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து கொண்டால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ முடியும்.
ஆப்பிள்
ஆப்பிள் பழத்தில் ஃப்ளேவினாய்டுகள் இருப்பதால் இது நம் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்க விடாமல் கட்டுப்படுத்துகிறது.
மேலும் குளுகோஸை கொழுப்பாக மாற்றும் என்சைமின் செயலை தடுக்கப்படுகிறது. இதனால் நம் உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகள் கரைக்கப்பட்டு உடல் எடையைக் குறைக்கிறது.
பேரிக்காய்
பேரிக்காயில் இருக்கும் பெக்டின் மற்றும் ஃப்ளேவினாய்டு போன்ற சத்துக்கள் நம் உடம்பில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, சர்க்கரை நோயை தடுக்கிறது.
மேலும் தினமும் பேரிக்காயை சாப்பிடுவதால், உடல் பருமனை குறைத்து, ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.
ப்ளூ பெர்ரி
ப்ளூ பெர்ரியில் இருக்கும் நீல நிறத்தில் ஆந்தோ சயனைன் என்ற வேதிப் பொருள் உள்ளது. எனவே இந்த பழத்தினை தினமும் சாப்பிடுவதால், புற்று நோய், இதய நோய் போன்ற பிரச்சனைகள் வரவிடாமல் தடுக்கிறது.
ஸ்ட்ரா பெர்ரி
ஸ்ட்ரா பெர்ரி பழத்தில் ஆந்தோசயனைன் மற்றும் ஃப்ளேவினாய்டு போன்ற சத்துக்கள் உள்ளது.
இந்தப் பழத்தினை சாப்பிடுவதால், உடலில் உள்ள கெட்டக் கொழுப்புக்களை குறைத்து, இதய நோய், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.