அமெரிக்காவில்மனைவியை கணவர் தூக்கி சுமக்கும்வினோத போட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின்கலிபோர்னியாவில் மைனே என்ற இடத்தில்மனைவியை கணவர் தூக்கி சுமக்கும்போட்டி நடத்தப்பட்டது. 834 அடி தூரம் மனைவியைதூக்கி சுமந்து முதலில் வரும்கணவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படிநேற்று (07) இப்போட்டி நடந்தது. அதில் 30 ஜோடி கணவன் – மனைவிபங்கேற்றனர். அதில் ஜெசிவால்-கிறிஸ்டின்ஆர் செனால்ட் ஜோடி வெற்றி பெற்றுசாம்பியன் பட்டம் வென்றது.
வெற்றிபெற்றஇந்த ஜோடிக்கு பரிசாக ‘பீர்’ வழங்கப்பட்டது.அதுவும் ஜெசிவாலின் மனைவி கிறிஸ்டின் ஆர்செனால்ட்டின் எடைக்கு நிகரான ‘பீர்’பரிசளிக்கப்பட்டது. மேலும் ஆர்செனால்டின் எடையைபோன்று 5 மடங்கு தொகை பணமும்பரிசாக வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் ஜெசிவால்-கிறிஸ்டின் ஆர்செனால்ட் தம்பதி 2 ஆவது முறையாக வெற்றிபெற்றுள்ளனர்.பின்லாந்தில் நடைபெற உள்ள உலகசாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்கஉள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.