09-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 23ம் திகதி, மொகரம் 28ம் திகதி, 09-10-2018 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அமாவாசை திதி காலை 9:48 வரை; அதன் பின் பிரதமை திதி, அஸ்தம் நட்சத்திரம் மதியம் 1:24 வரை; அதன்பின் சித்திரை நட்சத்திரம், சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி, உத்திரட்டாதி
பொது : துர்க்கை, முருகன் வழிபாடு.
மேஷம்:
எண்ணத்தில் புதுமை நிறைந்திருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரம் திருப்திகரமான வகையில் அபிவிருத்தியாகும்.உபரி வருமானம் சேமிப்பாகும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நிறைவேற்றுவர்.
ரிஷபம்:
சிலரது விமர்சனத்தால் மனத்தளர்ச்சி ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும். சுமாரான அளவில் பணவரவு இருக்கும். பிள்ளைகளின் செயல்பாடு கண்டு மனம் ஆறுதல் பெறுவீர்கள்.
மிதுனம்:
அதிக உழைப்பால் திட்டமிட்ட செயல் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி அதிகரிக்கும். ஆதாயம் சுமாராக இருக்கும். பெண்களுக்கு பிள்ளைகளின் வழியில் செலவு அதிகரிக்கும். நண்பரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.
கடகம்:
சமூகப்பணி புரிவதில் ஆர்வம் கொள்வீர்கள். பலரும் உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வர். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து புதிய சாதனை படைப்பீர்கள். லாபம் திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.
சிம்மம்:
பெற்றோரின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். தொழிலில் திட்டமிட்ட இலக்கு கூடுதல் கால அவகாசத்தில் நிறைவேறும். லாபம் சீராக இருக்கும். வெளியூர் பயணம் பயன்அறிந்து மேற்கொள்ளவும். பெண்கள் கணவரின் அன்புக்கு உரியவராவர்.
கன்னி:
உறவினரின் அன்பைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். பேச்சு, செயலில் நேர்மை வெளிப்படும். தொழில், வியாபாரம் செழித்து ஆதாயம் அதிகரிக்கும். பெண்கள் குடும்பநலனில் அக்கறை கொள்வர். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர்.
துலாம்:
தொடர்பு இல்லாத பணியில் ஈடுபட நேரிடும். தொழில், வியாபாரத்தில் சுமாரான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் உடல்நலத்திற்கு ஒவ்வாதவற்றை தவிர்க்கவும். நண்பரால் உதவி உண்டு.
விருச்சிகம்:
சாதனை நிகழ்த்தும் நோக்கில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் வியப்பூட்டும் வகையில் செழிக்கும். பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் குடும்பத்துடன் விருந்து, விழாவில் பங்கேற்பர்.
தனுசு:
புதிய நண்பர்களின் அறிமுகத்தால் நன்மை காண்பீர்கள். நம்பிக்கை இழக்க வைத்த செயல் வெற்றி இலக்கை அடையும்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி மேற்கொள்வீ்ர்கள். வருமானம் உயரும். சொத்து வாங்க அனுகூலம் ஏற்படும்.
மகரம்:
உறவினரின் பாசம் கண்டு வியப்படைவீர்கள். தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். விஷப்பிராணிகளிடம் விலகுவது நல்லது.
கும்பம்:
சிலரது பேச்சு சங்கடத்தை உருவாக்கும். முக்கிய பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேற்றுவது அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். பெண்கள் ஆடம்பர பொருள் வாங்க வேண்டாம்.
மீனம்:
புதிய வாய்ப்புக்களைச் சரியாக பயன்படுத்துவீர்கள். தொழில், வியாபாரம் அபரிமிதமான வளர்ச்சி பெறும்.தாராள பணவரவில் சேமிப்பு கூடும். பணியாளர்கள் செல்வாக்குடன் திகழ்வர். பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.