கடந்த செப்டம்பர் 5 ஆம் திகதி கூட்டு எதிரணியினால் நடாத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது வழங்கப்பட்டதாக கூறப்படும் பால் பக்கெட்டில் எந்தவித இரசாயனக் கலவையும் சேர்க்கப்படவில்லையென அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் இது தொடர்பில் கொழும்பு கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
அவரினால் பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பால் பக்கெட்டுக்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இந்த ஆய்விலேயே எந்தவித விஷமும் அந்த பால் பக்கெட்டில் கலக்கப்படவில்லையென முடிவு வெளியாகியுள்ளது.
இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார, கூட்டு எதிரணி அன்றைய தனது ஆர்ப்பாட்டத்தின் தோல்வியை மறைப்பதற்கு இந்த விஷ பால் பக்கெட் விவகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.