தமிழ்நாட்டில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற வழக்கில் மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொடைக்கானல் மலைப்பாதையில் கடந்த 18-ஆம் திகதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் 30 வயதுள்ள வாலிபர் இறந்து கிடந்தார்.
இது குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் இறந்தவர் கர்நாடகா மாநிலத்தின் மங்களூரை சேர்ந்த முகமது சமீர் என்பது தெரிந்தது.
அவர் அரபு நாட்டில் இன்ஜினியர் வேலை பார்த்து வந்துள்ளார்
இது குறித்த விசாரணையில் சமீரின் மனைவி பிரதோஸ் தனது கள்ளக்காதலன் முகமது யாசிக்குடன் சேர்ந்து கணவரை கொன்றது உறுதியானது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த பிரதோஷையும், யாசிக்கையும் பொலிசார் கைது செய்தனர். இதையடுத்து இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், சமீர் அரபு நாட்டிலிருந்து வருடத்துக்கு ஒரு முறை தான் சொந்த ஊருக்கு வருவார்.
இதனால் அவர் மனைவி பிரதோஸ் தனது பெற்றோர் வீட்டில் அடிக்கடி தங்கிய போது அருகில் இருந்த கார் ஓட்டுனர் யாசிக்குடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீர் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்த போது குடும்பத்துடன் காரில் சுற்றுலா சென்றார்.
காரை யாசிக் ஓட்டிய நிலையில், சமீரை அவருடன் சேர்ந்து கொல்ல பிரதோஸ் திட்டமிட்டார்.
இதற்காக இளநீரில் 15 தூக்க மாத்திரைகளை கலந்து கொடுக்க, சமீர் மயங்கினார்.
ஆனால் அவர் இறந்துவிட்டதாக கருதிய இருவரும் சமீரை காரின் பின் சீட்டில் வைத்துவிட்டு ஜாலியாக கர்நாடகா மாநிலத்தில் பல இடங்களை சுற்றியுள்ளனர்.
பின்னர் கொடைக்கானல் காட்டுப்பகுதியில் சமீரை வீச முடிவு செய்த போது அவர் முனங்கியுள்ளார்.
அப்போது தான் அவர் இறக்கவில்லை என்பதை உணர்ந்த கள்ளக்காதலர்கள் சமீரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து உடலை வீசிச் சென்றது தெரியவந்துள்ளது.
பின்னர் தனது வீட்டுக்கு வந்த பிரதோஸ் 60 பவுன் நகைகளை எடுத்துகொண்டு யாசிக்குடன் தப்பியோடிய நிலையில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.