மலையாள இசையமைப்பாளரும் சிறந்த வயலின் கலைஞருமான பாலபாஸ்கர் கடந்த வாரம் கார் விபத்தில் உயிரிழந்தார்.
திருச்சூர் வடக்குநாதர் கோயிலுக்குத் தன் குடும்பத்தினருடன் காரில் சென்றுவிட்டு அதிகாலை 4:30 மணிக்கு வீடுதிரும்பும்போது, பள்ளிப்புரம் அருகே வந்தபோது விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்தில் பாலபாஸ்கருக்கு பலத்த அடிபட்டு மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் கடந்த வாரம் உயிரிழந்தார்.
மேலும் அந்த விபத்தின்போது, முன் இருக்கையில் அமர்ந்திருந்த பாலபாஸ்கரின் இரண்டு வயது குழந்தை தேஜஸ்வினி படுகாயம் அடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மனைவி லட்சுமி அதிக காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கணவரும், குழந்தையும் இறந்த தகவல் இவருக்கு தெரிவிக்கப்படவில்லை.
சுயநினைவின்றி இருந்த காரணத்தால் இந்த தகவல் இவருக்கு தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று லட்சுமியின் தயார், நடந்த சம்பவங்களை கூறியுள்ளார்.
அதனை கேட்டு லட்சுமி எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் இருந்துள்ளார். இதனால், தாங்கள் சொல்வது லட்சுமிக்கு புரியவில்லை என நினைத்துள்ளனர்.
ஆனால், வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டிருப்பதால் லட்சுமிக்கு சுவாசித்தலில் சற்று பிரச்சனை இருக்கிறது. இதனால் சில நாட்கள் கழித்துதான் இந்த தகவலை கூற வேண்டும் என லட்சுமியின் தாயிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, திரவ உணவுகளை மட்டுமே எடுத்து வருகிறார்.