கனடா இராணுவத்தில் இடம்பெற்ற பாலியல் ரீதியான தாக்குதல்கள் தொடர்பான அறிக்கையின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 2018 மார்ச் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 111 அறிக்கைகளை கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்த எண்ணிக்கையானது இதற்கு முன்னர் பெறப்பட்ட 47 அறிக்கைகளின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்காகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இராணுவத்தில் அதனை தடுப்பதற்கான முயற்சியின் முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதாக கனேடிய படையினர் தெரிவித்துள்ளனர்.
அதாவது குறித்த அறிக்கை தொடர்பாக பாலியல் தாக்குதல்களை முறியடிப்பதற்கான முயற்சிகளை விசாரணைக் குழு மீது நம்பிக்கை கொண்டு குற்றச்சாட்டுகளை தெரிவிக்க மக்கள் முன்னோக்கி வருவதன் சிறந்த அறிகுறியாக விளங்குவதாக பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.