மேற்குவங்க மாநிலத்தில் காதலன் இறந்த துக்கம் தாளாமல் பள்ளி மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் Mirjapur பகுதியை சேர்ந்த நித்யானந்தா தாஸ் என்ற 26 வயது இளைஞர், கடந்த 30-ம் தேதியன்று கொல்கத்தா நோக்கி உள்ளூர் ரயிலில் பயணம் செய்துள்ளார்.
காதில் ஹெட்செட் மாட்டியபடி படியில் நின்று பயணம் செய்த நித்யானந்தா திடீரென தடுமாறி கீழே விழுந்து இறந்துள்ளார்.
அவர் இறந்த செய்தி அணைத்து ஊடகங்களில் பரவியதில் இருந்து Sryeashi Maity என்ற 18 வயது மாணவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பெரும் குழப்பத்தில் அமைதியாகவே இருந்ததை கவனித்த பெற்றோர், இருவரும் காதலர்கள் என்பதை புரிந்துகொண்டனர். மகளை பயிற்சி வகுப்பிற்கு அனுப்பிய நேரத்தில் தான் இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது என்பதை தெரிந்துகொண்டனர்.
மகளின் நிலையை கவனத்தில் கொண்டு தனித்து விடாமல் அவருடனே இருந்து வந்தனர். நித்யானந்தா இறந்து 8 நாட்கள் ஆகியிருந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, Sryeashi மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வெளியில் சென்றுவிட்டு திரும்பிய தாய் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார்.